கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அண்டை மாநிலங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5ஆயிரமும் வழங்க வேண்டும்.
தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக்காடு வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை முழுமையாக அறிவித்து நிரப்பிடவில்லை.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!