கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், கணக்கியல் பட்டதாரி ஆவார். இவரது கவனம் கணக்கியல் மட்டுமின்றி இயற்கை விவசாயத்திலும் திரும்பியுள்ளது. இதனால் தன்னுடைய வயல்வெளிகளில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அதீத ஈடுபாடு எடுத்துள்ளார்.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது முதலிரண்டு ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதாவும், பின்னர்தான் கற்றுத் தேர்ந்து லாபம் ஈட்டியதாகவும் அசோக்குமார் பகிர்ந்தார்.
அதுமட்டுமின்றி காலத்திற்கு ஏற்ற பயிர்களையும் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டுகிறார். தற்போது கோடைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால், முலாம் பழம் பயிரிட்டுள்ளார். இதனால் அதிக லாபத்தை ஈட்டலாம் என்று பட்டதாரி விவசாயி அசோக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க...‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்