கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள சு. ஒகையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 192 மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளி வளாகத்தில் 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளதால், மாணவர்கள் அப்பகுதிக்குச் செல்லும்பட்சத்தில் உயிர்ச் சேதம் ஏற்படும் இடர் உள்ளது.
எனவே, பழுதடைந்த அந்த இரண்டு பள்ளி கட்டடங்களையும் அகற்ற வேண்டும் எனவும், அதேபோல் மாணவர்கள் நலனுக்காகப் புதிய கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும் எனவும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி