ETV Bharat / state

4ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை - kallakurichi district news

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக நான்காவது முறையாக தனது முழு கொள்ளளவை கோமுகி அணை எட்டியுள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை
முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை
author img

By

Published : Oct 19, 2020, 3:55 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 46 அடி கொள்ளளவு கொண்டது கோமுகி அணை. இங்கு பாதுகாப்பு கருதி 44 கன அடி நீர் மட்டுமே சேமித்து வைக்கப்படுகிறது.

கோமுகி அணையில் இருந்து உற்பத்தியாகும் ஆறு கள்ளக்குறிச்சி வழியாக கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாறு நதியில் கலக்கிறது. இந்த அணையின் மூலம் சுமார் 1,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கல்வராயன் மலைப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாசன விவசாயிகளின் நலன் கருதி கோமுகி அணையின் முதன்மைக் கால்வாயிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு 8ஆம் தேதி உள்பட இரண்டு முறை அணை நிரம்பியது. இந்நிலையில் நேற்று (அக.19) மாலை கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கோமுகி அணை 4ஆவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கனமழை காரணமாக கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக 220 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடிவேரி அணை கால்வாயில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.