கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாண்டூர் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் இரவு காவலர் ஹரிதாஸ் கடை முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் போது, நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத அங்கு சென்றது.
அப்போது அந்தக் கும்பல் தூங்கிக் கொண்டிருந்த காவலரை தாக்கிவிட்டு, மதுக் கடையை உடைத்து கடையிலிருந்த மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை - பாண்டூர் சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தக் கும்பலை, இரவு ரோந்தில் ஈடுப்பட்டிருந்த காவலர் தீபன் வழிமறித்து விசாரித்தார். அப்போது, அந்தக் கும்பல் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அந்த நால்வரும் உளுந்தூர்பேட்டை அருகே கீழ் புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, அவர்கள் நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க...டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!