கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுத்தூர்பேட்டை பகுதியிலுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைத்துள்ள குமார் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோழிகள் வளர்க்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இன்று காலை கோழிப் பண்ணையில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுத்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைப்புத் துறையினரின் இந்தச் செயலால் கோழிகள் காப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் சரக்கு ரயிலில் அடிபட்டி இரண்டு காளைகள் பலி!