கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி தீபா காவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன், தற்காலிக அயல்பணியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் பெண் காவலர் ஒருவர் சேர்ந்து, காவலர் தீபாவை மகளிர் காவல் நிலையத்திற்குப் பணிக்கு வருமாறு, கடந்த 4 நாட்களுக்குமுன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் தற்கொலை முயற்சி
![பெண் காவலர் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13365248_.png)
மேலும் தீபாவை, வரஞ்சரம் காவல் நிலைய அலுவலர்கள் நீதிமன்றப்பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இரண்டு காவல் நிலைய காவல் துறை அலுவலர்களும் மாற்றி மாற்றி வெவ்வேறு பணிகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் அழைக்கப்பட்டதால், எங்குப் பணியாற்றுவது எனத் தெரியாமல் மன உளைச்சலில் தீபா இருந்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
![எதற்கும் தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13365248_t.jpg)
மேலும், தீபா கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைத்தில் பணிக்கு வரவில்லை என ஓபன் மைக்கில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைடுத்து இன்று காலை வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்ற தீபா விஷம் குடித்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
பணி அழுத்தத்தினால் காவலர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரிவினை இன்னமும் வலிக்கிறது- மோகன் பகவத்!