ETV Bharat / state

படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அழைப்பு

author img

By

Published : May 19, 2022, 3:06 PM IST

Updated : May 19, 2022, 4:00 PM IST

படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என உளுந்தூர்பேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்புவிடுத்தார்.

படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்து திருநாவலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் படித்த மாணவ, மாணவிகளை பட்டமளித்து பாராட்டி கௌரவித்தார். பின்பு நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'படித்த இளைஞர்கள் இன்ஜினியர் ஆகணும். டீச்சராக ஆகணும். டாக்டர் ஆகணும். நடிகர் ஆகணும். ஆனால் அரசியல்வாதியாகணும் என யாரும் சொல்லி கேள்விபட்டதில்லை. ஆனால், அவர்களுக்கு அரசியல் தேவை என ஆழமாக கருதுகிறேன். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால், ஆளுநர் இளைஞர்களை நேர்மையான அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்கலாம்.

நல்லவர்களும் படித்தவர்களும் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால், அரசியல் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் எப்படி படிக்கிறீர்களோ அதேபோல் திருமணமும் சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டும். நான் படிக்கிறேன், வேலை தேடுகிறேன் என திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள், பெற்றோர் தேர்ந்தெடுத்து கொடுத்தாலும் நல்லது. ஆனால் நாமாகவே பெண்ணை தேர்ந்தெடுத்தாலும் பெற்றோர் ஒப்புதலோடு திருமணத்தை செய்துகொள்ள வேண்டும் என சின்ன கோரிக்கையாக வைக்கிறேன்.

படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

இன்றைய சூழ்நிலையில் இளைஞர் அரசியல் நமக்கானது என்று நிர்ணயிக்காமல் நேர்மையான அரசியலில் ஈடுபட வேண்டும். படித்தவர்கள் அதிகமாக அரசியலுக்கு வந்தால் மிகவும் பண்படும். அரசியலில் பல தலைவர்கள் உருவாகும்போது பாமர மக்களுக்கானதாக மாறும்’ என கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு தனது ஆளுமைக்கு உட்பட்டது இல்லை என்பதால் அந்த விவகாரத்தில் தன்னால் பதில் கூற முடியாது என்றும்; நீதிமன்ற விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பல்கலைக் கழகத் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளதாகவும் முதலமைச்சருடன் இணக்கமாக இருக்கும் மாநிலங்களில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் துணைவேந்தர் பணி நியமனம் இருந்து வருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.. ரயில்வே கேட்டை உடைத்து தப்பிய ரூ.20 லட்சம் கொள்ளையர்கள்!

Last Updated : May 19, 2022, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.