ETV Bharat / state

யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது - எடப்பாடி பழனிசாமி கேள்வி?

author img

By

Published : May 2, 2022, 9:11 AM IST

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்குத் திறப்பு விழாவை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருவதாகவும், யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்குத் திறப்பு விழாவை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது - எடப்பாடி பழனிசாமி கேள்வி? Edappadi  Palaniswami said cm Stalin is only doing the ceremony for  projects brought under AIADMK regime and opening ceremony for completed works said

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில், எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்குத் திறப்பு விழாவை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. தொழிற்சாலைகள் சரியாகச் செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார். கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகள் மூலமாக கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வருவதற்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றார்.

சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

இன்னமும் சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவக் கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான். திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்ததாக அப்பட்டமாகப் பொய் சொல்கின்றனர். யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது" என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 'கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.