ETV Bharat / lifestyle

முகப்பரு பிரச்சனையா? கவலையை விடுங்க.. இத ட்ரை பண்ணுங்க! - Natural remedies for pimples

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

முகப்பரு பிரச்சினை எதனால் ஏற்படுகிறது, அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

முகப்பரு தொடர்பான கோப்புப் படம்
முகப்பரு தொடர்பான கோப்புப் படம் (Credits - Getty Images)

சென்னை: ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. அதனால் தான் பருவ வயதினருக்கு முகப்பரு பிரச்சினை அதிகமாக இருக்கும். இந்த பருவத்தில் ஆண்ட்ரோஜன் என்ற பாலின ஹார்மோன் உடலின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மோசமான வாழ்க்கை முறையாலும் முகப்பரு பிரச்சினை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது சருமத்தின் கீழ் பகுதியின் உள்ள செபாசியஸ் என்னும் சுரப்பியை தூண்டி அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

இதனால் சருமத்தின் எண்ணெய் பசை அதிகரிக்கும். இதனுடன் தூசி, பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் சேர்ந்து பருக்கள் ஏற்படுகிறது. அதிக முகப்பரு காரணமாக சிலர் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு செல்வதற்கும் போட்டோ எடுப்பதற்கும் கூட அஞ்சுகின்றனர். இனிமேல் கவலைப்பட தேவையில்லை. சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்: சாதாரண சருமத்தை விட எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். ஆகையால் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக வெளியில் சென்று விட்டு வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். இதற்கு கற்றாழையால் செய்யப்பட்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம். முகம் கழுவும் போது முகத்தில் சிறிது மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்யும் போது முகப்பரு ஏற்படுவது குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெளியில் செல்லும் முன் கவனிக்க வேண்டியது: சில நேரங்களில் வெயிலில் செல்வதாலும் முகப்பரு ஏற்படலாம். எனவே பகலில் வெளியில் செல்வதற்கு முன்பு உங்கள் சருமத்திற்கு ஏற்ற, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: பழங்களில் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க..உங்க முகம் தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னும்!

ஃபேஸ் பேக்குகள்: கிரீன் டீ தூள் ஃபேஸ் பேக்: கிரீன் டீயில் உள்ள ரசாயன கலவையில், சருமத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் நிறைந்து உள்ளது. அவை முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்குவதாக கூறப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் கிரீன் டி தூளை போட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் போட்டு வர முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகரில் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புகள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ, முகப்பரு பிரச்சினை தீரும்.

கடல் உப்பு ஸ்க்ரப்: பருவ வயதினர் வாரந்தோறும் முகத்தை ஸ்க்ரப் செய்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை, காபி தூள், கடல் உப்பு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை போட்டு முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் இருக்கும்.

செய்ய வேண்டியவை:

  • விட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை வாழ்க்கையில் நடைமுறைபடுத்திக்கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதவை:

  • செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, முகப்பரு பிரச்சினை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
  • எண்ணெயில் பொறித்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறியவற்றை பின்பற்றி வர முகப்பருக்கள் படிப்படியாக மறையும் என்றும், இனிமேல் வராமல் தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.