சென்னை: இந்திய விமானப்படை (Indian Air Force) தனது 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2024 அக்டோபர் 6 அன்று தமிழ்நாட்டின் சென்னை மெரினா வான்பகுதியில் விமான சாகசக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த ஆண்டு நிகழ்வு “இந்திய விமானப்படை - திறன், வலிமை, தற்சார்பு” ("Bhartiya Vayu Sena - Saksham, Sashakt, Atmanirbhar") என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் உறுதியான பங்களிப்பை எடுத்துரைக்கிறது.
மக்கள் அன்றைய தினம் மெய்சிலிர்க்கும் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இந்திய விமானப்படையிலிருந்து 72 விமானங்கள் ஏரோபாட்டிக் சாகசங்களையும், பல வான் சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறது. இந்த நிகழ்வு மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2023 அக்டோபர் 8 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இதேபோன்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததால், இம்முறையும் அதேபோன்ற வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#IndianAirForceDay2024
— Indian Air Force (@IAF_MCC) September 25, 2024
Countdown continues, stay tuned....
IAF's 92nd Anniversary celebrations.
Aerial Display at Marina Beach on 6th Oct 24. #Marinabeach#VanakkamChennai @SpokespersonMoD @HQ_IDS_India @DefenceMinIndia @CMOTamilnadu @rajbhavan_tn @adgpi… pic.twitter.com/T0kto139b7
அந்தவகையில், சென்னை விமான சாகசக் கண்காட்சியில் சாகசக் குழுக்கள் மற்றும் விமானங்களின் முழு விவரங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆகாஷ் கங்கா (Akash Ganga):
ஆகாஷ் கங்கா என்பது இந்திய விமானப் படையில் (IAF) இருக்கும் உயரடுக்கு ஸ்கை-டைவிங் குழுவாகும். இந்த குழு அதிக உயரத்தில் இருந்து விறுவிறுப்பான ஃப்ரீ-ஃபால் ஸ்டண்டுகளை செய்கிறார்கள். துல்லியம் மற்றும் ஒருங்கிணைப்பைக் காட்டுகிறார்கள். இவர்களின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சிக்கலான வடிவங்கள் வானில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரிப்பார்கள்.
சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு (Suryakiran Aerobatic Team):
சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம் குறுகிய அமைப்புகளில் பறக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் பார்வையாளர்களை, இவர்களின் சிக்கலான வடிவங்கள் மற்றும் துணிச்சலான ஸ்டண்ட்கள் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
Chennai, are you ready!? Get set to witness a breath taking display by the Suryakiran Aerobatic Team on the occasion of the 92nd Airforce Day celebration on 4th and 6th Oct at Marina Beach at 11 am! pic.twitter.com/NCBC1DrO9f
— Suryakiran Aerobatic Team (@Suryakiran_IAF) September 29, 2024
சாரங் ஹெலிகாப்டர் காட்சிக் குழு (Sarang Helicopter Display Team):
சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே டீம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அசத்தலான வான்வழி சார்ந்த திறன்களை வெளிகாட்டுகிறது. ஹெலிகாப்டர்களின் சுறுசுறுப்பு, சிக்கலான நகர்வுகள், வானில் ஏற்படுத்தும் துல்லியமான வடிவங்கள் என அனைத்தும் பார்வையாளர்களுக்கு விருந்தாகும்.
நம் விமானப்படையின் திறன்கள் மற்றும் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடக்கப்போகும் வான்வழி சாகசக் கண்காட்சியில் பங்குபெறும் போர் விமானங்களின் விவரக்குறிப்புகள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
Vanakkam Chennai! Witness the sky come alive like never before as the Sarang helicopter display team is all set to perform in your city! Catch the team perform some breathtaking manoeuvres over Marina Beach and Air Force Station,Tambaram, towards Air Force day celebrations 🇮🇳 pic.twitter.com/BNrc1E3FLK
— Sarang Helicopter Display Team (@sarang_iaf) September 25, 2024
இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சென்னை வான்பகுதி சாகசக் கண்காட்சியை பிரமிப்பாக்கும் விமானங்களின் பட்டியல் மற்றும் அதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.
இலகுரக போர் விமானம் (எல்சிஏ) தேஜஸ்:
- உற்பத்தியாளர்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
- வடிவமைப்பு: ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) மற்றும் HAL ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
- வகை: ஒற்றை எஞ்சின், 4.5 தலைமுறை, மல்டிரோல் போர் விமானம்.
- முதல் விமானம்: ஜனவரி 4, 2001.
- அறிமுகம்: ஜனவரி 17, 2015.
- அம்சங்கள்: டெல்டா விங் வடிவமைப்பு, ஃப்ளை-பை-வயர் ஃப்ளைட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட ஏவியோனிக்ஸ்.
- மாறுபாடுகள்: தேஜாஸ் மார்க் 1, மார்க் 1ஏ, மற்றும் தேஜாஸ் பயிற்சியாளர்/இலகுரக தாக்குதல் விமானம்.
- பயனர்கள்: இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை.
- உற்பத்தி: 50க்கும் மேற்பட்ட யூனிட்கள் கட்டப்பட்டுள்ளன, பல்வேறு வகைகளில் குறைந்தது 324 விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலகுரக போர் ஹெலிகாப்டர் (LCH) பிரசாந்த்:
- உற்பத்தியாளர்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
- வடிவமைப்பு: ப்ராஜெக்ட் லைட் காம்பாட் ஹெலிகாப்டரின் (LCH) கீழ் உருவாக்கப்பட்டது.
- வகை: மல்டி ரோல் லைட் அட்டாக் ஹெலிகாப்டர்.
- முதல் விமானம்: மார்ச் 29, 2010.
- அறிமுகம்: அக்டோபர் 3, 2022.
- அம்சங்கள்: அதிக உயரத்தில் செயல்படும் திறன், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் ஆயுதங்கள்.
- பயனர்கள்: இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம்.
- உற்பத்தி: வரையறுக்கப்பட்ட தொடர் உற்பத்தி, இதுவரை 19 அலகுகள் கட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: |
பாரம்பரிய விமானம் (டகோட்டா):
#IndianAirForceDay2024
— Indian Air Force (@IAF_MCC) September 28, 2024
Stay tuned...
To Witness the biggest extravaganza of the year
Watch it Live with us,
Don't Miss it!
Aerial Display at Marina Beach
On 6th Oct 24, starting 11 AM #Marinabeach#VanakkamChennai pic.twitter.com/MTIJh7IXoA
- வகை: இராணுவ போக்குவரத்து விமானம்.
- உற்பத்தியாளர்: டக்ளஸ் விமான நிறுவனம்.
- அறிமுகம்: 1936.
- அம்சங்கள்: ட்வின்-இன்ஜின், இரண்டாம் உலகப் போரின் போது துருப்புக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
- மரபு: அதன் நம்பகத்தன்மை மற்றும் பல்துறைக்கு பெயர் பெற்ற இது பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது.
ஹார்வர்ட்:
- வகை: மேம்பட்ட பயிற்சி விமானம்.
- உற்பத்தியாளர்: வட அமெரிக்க ஏவியேஷன்.
- அறிமுகம்: 1935.
- அம்சங்கள்: இரண்டாம் உலகப் போரின் போது விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒற்றை இயந்திரம்.
- மரபு: ஆயிரக்கணக்கான விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அதன் பங்கிற்கு புகழ்பெற்றது, இது ஏர்ஷோக்கள் மற்றும் வரலாற்று காட்சிகளில் பிரபலமான விமானமாக உள்ளது.
தற்போது நடக்கவிருக்கும் விமானக் கண்காட்சியில், இந்திய விமானப்படையின் உயர்நிலை அணிகளாகக் கருதப்படும், வானில் சாகசம் செய்யும் ஆகாஷ் கங்கா, நெருங்கிச் செல்லும் சாகசத்திற்குப் புகழ்பெற்ற சூர்யகிரண், வான்வழி ஹீரோவாகத் திகழும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது தான் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சிறப்புமிக்க அணிகளுடன், தேசத்தின் பெருமையான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நவீன இலகுரக போர் விமானம் தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்கள் ஆகியவை அணிவகுப்பு மற்றும் வான்வழி சாகசக் காட்சிகளில் பங்கேற்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.