கடலூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் சேர்த்து மொத்தம் 15 இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கிவருகின்றன.
கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவரும் கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா குத்துவிளக்கு ஏற்றிவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரா ராமலிங்கம், மண்டல மேலாளர் குணசேகரன் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 50 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அநாதை சடலங்களை புதைப்பதில் வெள்ளிவிழா கண்ட நாயகன் சந்திர குருவின் கதை!