சமையல் எண்ணெய் ஏற்றிய டேங்கர் லாரி சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதி பரிக்கல் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
தலைகுப்புற கவிழ்ந்த லாரியிலிருந்து சமையல் எண்ணெய் வெளியேறத் தொடங்கியது. இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் வெடிவிபத்து குறித்த ஆபத்தை சற்றும் அறியாமல் குடங்கள், பாத்திரங்களில் சமையல் எண்ணெய்யைப் பிடித்துச் சென்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல், தீயணைப்புத் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேலாக சென்னை முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரி ஓட்டுநர் சரவணன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து குறித்து திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : 'ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும்'