கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி கலைவாணி. இவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் மதிய உணவு சாப்பிட சங்கராபுரம் பேருந்து நிலையத்திலுள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று உணவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு பார்சலும் வாங்கி வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த ஒரு சில மணி நேரங்களில் கலைவாணி மகன், மகள் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக இருவரையும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். இதற்கிடையே அவர் வாங்கி வந்த சாப்பாடு பார்சலை பார்த்தபோது அதில் ஒரு பல்லி விழுந்திருந்ததைக் கண்டு அதிரிச்சையடைந்தார்.
உணவகத்தில் பல்லி விழுந்த உணவு
இந்தநிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள உணவகத்தில் பல்லி விழுந்த உணவு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இது குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முறையாக அனைத்து உணவகங்கள், சிறிய இனிப்பு கடைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!