கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலம் கல்வராயன் மலை. ஆனால், அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி அருகே மண்சரிவு ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் முறையாக சரி செய்யாததால், இன்று காலை அவ்வழியே சென்ற அரசுப்பேருந்து நிலை தடுமாறி சாலையின் அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினர். இவ்விபத்திற்கு காரணம் அப்பபகுதியில் ஏற்பட்ட மண்சரிவு சரியான முறையில் சீர்செய்யப்படாததே என சுற்றுலாப்பயணிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு