ETV Bharat / state

மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும் - முத்தரசன் சூளுரை

author img

By

Published : Aug 2, 2021, 1:37 AM IST

மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும் எனவும், இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

attempts-to-build-a-dam-in-megathathu-will-be-defeated-says-mutharsan
மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும் - முத்தரசன் சூளுரை

கள்ளக்குறிச்சி: மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா உளுந்தூர்பேட்டையில், மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதைத்தெடார்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், " தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் போராட்டத்தின் வாயிலாகவும், உச்ச நீதிமன்றத்தின் நிர்பந்தத்தின் மூலமாகவும் மட்டுமே மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்காக 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த ஒதுக்கீட்டை தாங்களே கொண்டுவந்தது போல பாஜகவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசுதான் நடத்தும் என்ற நிலைப்பாடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். இந்நிலை தொடர்ந்தால், விரைவில் மிகப்பெரிய போராட்டங்களும், கிளர்ச்சிகளும் வெடிக்கும்.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை 10ஆயிரம் பேரைத் திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் அணையை கட்டியே தீருவோம் என தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே பாஜகவின் இரட்டைவேடம் தெளிவாகத் தெரிகிறது. மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் அறிவிப்பு வெற்று நாடகம் - பேரா.ஜவாஹிருல்லா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.