கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புகைப்பட்டி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் ராஜாஜி. அவருடன் கிராம நிர்வாக உதவி அலுவலராகப் பணியாற்றிவருபவர் வீராசாமி.
இந்த நிலையில் வீராசாமி சில நாள்களாகப் பணிக்கு வராமல் இருந்துவந்தார். அதனால் ராஜாஜி மட்டுமே அனைத்து வேலைகளையும் கவனித்துவந்தார்.
அதையடுத்து வீராசாமி நேற்று ராஜாஜியை தொலைபேசியில் அழைத்து, நிலம் அளவு தொடர்பாகப் பணிக்கு அழைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜாஜி, "நீ பணிக்குச் சரியாக வருதில்லை, நீ அழைக்கும்போது என்னால் வர முடியாது" எனத் தெரிவித்துள்ளார். அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வீராசாமி, புகைப்பட்டிக்குச் சென்று ராஜாஜியை சரமாரியாகத் தாக்கி கையை கடித்துள்ளார். அதில் படுகாயமடைந்த ராஜாஜி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையால் திட்டிய மதுப்பிரியர் கைது!