கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (58), மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக எலவனாசூர்கோட்டை பகுதி ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் அடுத்த கோட்டை அடுத்த செம்பியன் மாதேவி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக சென்றது. அப்போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நோயாளியுடன் சென்ற இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகங்கையில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் அதிமுக குலுக்கல் முறையில் தேர்வு!