கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா என்ற நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் விபத்து
அந்த ஆம்புலன்சில் கர்ப்பிணி சங்கீதாவுடன், அவருடைய மாமியார் ரோஸ், உறவினர் வசந்தி, ஆஷா, ஆம்புலன்ஸ் ஊழியர் அமுதவல்லி ஆகியோர் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்தூர் அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கர்ப்பிணி சங்கீதா உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணி சங்கீதா, பிரசவத்திற்காக அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் கதையாகிவரும் ஆம்புலன்ஸ் விபத்து
கடந்த 10ஆம் தேதி ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி கர்ப்பிணி உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே உலுக்கிய நிலையில், இன்று (ஜூன்.25) காலை மேலும் ஒரு விபத்து நிகழ்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னையின் மூல காரணத்தை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பேதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை