கள்ளக்குறிச்சி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தனி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செந்தில்குமாரை தலைமைக் கழகம் அறிவித்தது. இதையடுத்து, இவரை மாற்றக்கோரி கடந்த மூன்று நாள்களாக அதிமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நான்காவது நாளாக இன்று 500க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்றும் சாலை மறியலில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த சாலை மறியலின்போது 40க்கும் மேற்பட்ட நகர, மாவட்ட நிர்வாகிகள் நகர செயலாளர் பாபுவிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கள்ளக்குறிச்சி காவல் துறையினர் கைது செய்த முற்பட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.