கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான காவலர்கள், திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர்.
நாட்டு துப்பாக்கி பறிமுதல்
விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள எகால் கிராமத்தை சேர்ந்த லியோ டெனிஸ் (22), டேவிட் (22), பிரவின் (24) என்பதும், மணலூர்பேட்டை வனப்பகுதியில் வேட்டையாட வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி கத்தி, டார்ச்லைட், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்'