கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பிமாதேவி கிராம வயல்வெளியில் பகுதியில் நாகை மாவட்டம் இடையத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக ஆட்டுப்பட்டி அமைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் காலணியால் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்!