கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் மனோஜ்குமார் (16), டிவி பார்ப்பதற்காகப் பெற்றோரிடம் டிவி ரிமோட் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ரிமோட் தர மறுப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் திடீரென வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத சிறுவனின் பெற்றோர், மகனின் நிலைமையைக் கண்டு கதறி அழுதனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
டிவி ரிமோட் கொடுக்காததால் 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.