கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த பத்து ஆண்டுகளாக வாசவி வனிதா எனும் பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனத்தின் சார்பில் திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள மக்கள் பயன்பெரும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.
மேலும், நுரையீரல், காது, மூக்கு உள்ளிட்ட உறுப்புகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் சார்பில் 105 தம்பதியினருக்கு சஷ்டியப்த, பீமரத, சதாப்தி எனப்படும் 60வது, 70வது மற்றும் 80வது திருமண விழா நடைபெற்றது.

அனைத்து தம்பதியினரும் தங்களது குடும்பத்துடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் கோட்டாச்சியர் கலந்துகொண்டார். ஒரே திருமண மண்டபத்தில் 105 ஜோடி தம்பதியினருக்கு நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்!