ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற ஆனந்த குமார். இவர் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ரகசியமாக விற்பனை செய்து வந்ததோடு, பகல்- இரவு நேரங்களில் குடிபோதையில் சாலையில் செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அருகாமை வீட்டினர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்துக் காயப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாநகரக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கோபிச்செட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆனந்தகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைக்கு பரிந்துரைத்தார்.
அதனடிப்படையில் ஆனந்தகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு பலத்த காவலுடன் கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: 2 கிலோ கஞ்சா கடத்திவந்த இளைஞர் கைது!