ETV Bharat / state

சக மாநிலத்தவரைக் கொலை செய்த இளைஞர் கைது! - Young people from Bihar

ஈரோடு: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை சக மாநில இளைஞர்களே கொலை செய்துள்ள சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Jan 6, 2020, 9:28 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஸ் (35). இவர் அதே பகுதியில் நவீன விசைத்தறிக்கூடம் அமைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நவீன விசைத்தறிக் கூடத்தில் பீகார் மாநிலம், நக்வான் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார்(25), சுகேந்திர குமார்(28), ரவீந்திர குமார், சவுராப் ரஞ்சன் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளனர்.

இதில் சவுராப் ரஞ்சன் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நவீன் குமார், சுகேந்திர குமார் மற்றும் ரவீந்திர குமார் ஆகியோர் விசைத்தறி கூடத்திலேயே உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நவீன் குமார், சுகேந்திர குமார் மற்றும் ரவீந்திர குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தறிப்பட்டறை உரிமையாளர் ரமேஸ் காலையில் விசைத்தறி கூடத்திற்கு வந்து பார்த்த போது நவீன்குமார் மற்றும் சுகேந்திர குமார் ஆகியோர் தலையில் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஸ் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் வடமாநில இளைஞர்கள் நான்கு பேரும் மது அருந்தியும் கஞ்சா விற்பனை செய்தும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும்; இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடத்திருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஈரோட்டிலிருந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். மேலும் கொலையான இருவரையும் ரவீந்திரகுமார் இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளது தெரியவந்ததையடுத்து ரவீந்திர குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சக மாநிலத்தவரை கொலை செய்த இளைஞர்

அதனைத் தொடர்ந்து குடோனில் கொலையான இருவரின் உடல்களையும் காவல் துறையினர் சாலைக்கு எடுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தியது, இப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வடமாநில இளைஞர்கள் இருவரை சக மாநில இளைஞர்களே கொலை செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவலரைத் தாக்கிய கஞ்சா வியாபாரி - நெய்வேலியில் பரபரப்பு!

Intro:Body:tn_erd_05_sathy_bihar_youth_murder_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்திரகுமார் வர்மா நவீன்குமார் ஆகிய இரண்டு வடமாநில ஏர்லூம் விசைத்தறி தொழிலாளர்கள் தறிக்குடோனில் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் கவுந்தப்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஸ் (35). இவர் அதே பகுதியில் நவீன விசைத்தறிக்கூடம் அமைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நவீன விசைத்தறி கூடத்தில் பீகார் மாநிலம் நக்வான் மாவட்டம் கயா என்ற ஊரை சேர்ந்த லால்லன்பிரசாத் மகன் நவீன்குமார்(25), பீகார் மாநிலம் இமான்கஞ்சியை சேர்ந்த சுசில் பிரசாத் மகன் சுகேந்திரகுமார்(28), பீகாரை சேர்ந்த ரவீந்திரகுமார், சவுராப் ரஞ்சன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்துள்ளனர். சவுராப் ரஞ்சன் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நவீன்குமார், சுகேந்திரகுமார் மற்றும் ரவீந்திரகுமார் ஆகியோர் விசைத்தறி கூடத்திலேயே உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நவீன்குமார், சுகேந்திரகுமார் மற்றும் ரவீந்திரகுமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தறிப்பட்டறை உரிமையாளர் ரமேஸ் காலையில் விசைத்தறி கூடத்திற்கு வந்து பார்த்த போது நவீன்குமார் மற்றும் சுகேந்திரகுமார்வர்மா ஆகியோர் தலையில் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரNமேஸ் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டத்தில் வடமாநில இளைஞர்கள் நான்கு பேரும் மது அருந்தியும் கஞ்சா விற்பனை செய்தும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும். இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடத்திருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஈரோட்nலிருந்து மோப்பநாய் மற்றும் தடவியியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலையான இருவரையும் ரவீந்திரகுமார் இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளது தெரிவந்ததையடுத்து ரவீந்திரகுமாரை கவுந்தப்பாடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதனை தொடர்ந்து தறிக்குடோனில் கொடூராமான முறையில் தலையில் தாக்கப்பட்டு கொலையான இருவரின் உடல்களையும் காவல்துறையினர் சாலைக்கு எடுத்துவந்து பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தியது இப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இளைஞர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் உடனே பரவவிட்டுள்ளனர். வடமாநில இளைஞர்கள் இருவரை வடமாநில இளைஞர்களே கொலை செய்துள்ளது இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.