கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் செல்லதுரை. லாரி டிரைவரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த நிர்மலா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்லதுரை மது பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பிரிந்து வந்த மனைவியைத் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்லதுரை முறையிட்டுள்ளார். பின்னர் மனைவி நிர்மலா வீட்டின் முன்பாக சென்ற செல்லதுரை, தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினார். பின்னர் செல்லதுரையை கைது செய்து ஈரோடு நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.