ETV Bharat / state

மைனர் பெண்ணை மணந்த இளைஞர்கள்; 6 பேர் கைது

ஈரோடு: பவானி அருகே மைனர் பெண்ணை திருமணம் இரண்டு இளைஞர்கள் திருமணம் செய்தனர். அவர்களுடன் ஆறு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

fdas
fdas
author img

By

Published : Jul 20, 2021, 4:22 AM IST

ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் பன்னிமடை குடியைச் சேர்ந்த வடிவேல் மகன் அஜித் (21) என்பதும், சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் அவர் இருக்கிறார் என்பதும், அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர்களை அழைத்து காவல் துறையினர் விசாரித்தனர்.

அப்போது கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரிபுரம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி மகன் காமராஜ் (34) என்பவருக்கு 17 வயது மட்டுமே ஆன அச்சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரிந்தது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு கோவில்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அச்சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான அஜித், ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, சங்ககிரி அருகே உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்துவிட்டு பவானி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர், கட்டாயத் திருமணம் செய்த காமராஜ் மற்றும் பெற்றோர், மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த அஜித் உள்பட ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.