ஈரோடு மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் கதிரவன் எடுத்துவருகிறார். இந்நிலையில் அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு செயல்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவிட்-19 தொற்று குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்னும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி ஒருவர் கோவிட்-19 தொற்று குறித்து பொதுமக்களிடம் தவறான செய்தியை பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க...‘கரோனா குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை’ - ஆட்சியர் எச்சரிக்கை