ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் தக்காளி செடியிலிருந்து பறிக்கப்பட்டு தாளவாடியில் உள்ள ஏல விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். தற்போது மழை இல்லாமல் வெயில் வாட்டுவதால் தக்காளி வரத்து ஏக்கருக்கு 10 டன் ஆக அதிகரித்துள்ளது. மழைகாலத்தில் சாகுபடி செய்த தக்காளி செடிகள் தற்போது காய்பிடித்துள்ளதாலும் வரத்து அதிகமானது.
தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதால் அதிக விலைக்கு வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.700 முதல் ரூ.900 வரை விற்ற நிலையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.350க்கு மட்டுமே விற்பனையானது.
அதாவது கிலோ ரூ.40 வரை விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.12 ஆக சரிந்துள்ளது. தக்காளி விலை சரிவால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை குறைந்துள்ளாத்ல உணவகங்கள், சிறு கடைகளில் தக்காளி அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தக்காளி விலை சரிந்தாலும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்