ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அருகே பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தேக்கு, ஈட்டி, வேம்பு போன்ற விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற வனவிலங்குகளும் உள்ளன.
இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், கடும் வெயிலின் தாக்கத்தினாலும் இங்குள்ள மரங்கள் காய்ந்து இருந்தன. இந்நிலையில் எதிர்மேடு என்ற இடத்தில் திடீரென காட்டு தீ பற்றியது.
காற்றின் வேகத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 30 ஏக்கர் பரப்பில் தீ வேகமாக பரவியது.
இதனால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. தற்போது வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வணிக வளாகத்தில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!