ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறும் கருப்பன் ஒற்றை யானை தினந்தோறும் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியுடன் இரவு நேரக் காவலுக்குச் சென்ற இரு விவசாயிகளைத் தாக்கி கொன்றது. இதனால் அச்சமடைந்த தாளவாடி மக்கள் கருப்பன் யானையைப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து கருப்பன் யானையைப் பிடிக்கக் கடந்த ஜனவரி மாதம் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆபரேசன் கருப்பு என்ற பெயரில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 4 மாதங்களாகக் கருப்பன் யானை வனத்துறையினரிடம் பிடிபடாமல் தப்பியது. கடந்த 3 முறை கும்கி யானைகள் மூலம் பிடிக்கும் பணி தோல்வியில் முடிந்தது.
இந்த முறை ஆபரேசன் கருப்பு என்ற பெயரை STR JTM 1 என மாற்றி நேற்றிரவு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காகப் பொள்ளாச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட மாரியப்பன், சின்னத்தம்பி கும்கி யானைகள் மூலம் யானை வரும் வழித்தடத்தில் காத்திருந்தனர். வனத்துறையினர் எதிர்பார்த்தபடி வனத்திலிருந்து வெளியேறி யானை மகாராஜன் புரம் விவசாயத் தோடத்துக்கு வந்தது.
ஒற்றை யானை கருப்பன் விவசாய தோட்டத்திற்கு அங்குக் காத்திருந்த டாக்டர்கள் பிரகாஷ், விஜயராகவன் ஆகியோர் கும்கி யானைகள் மாரியப்பன், சின்னத்தம்பி உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். மயக்க நிலையிலிருந்த யானையைக் கால்களைக் கட்டி ஜேசிபி இயந்திரம் மற்றும் கும்கி யானைகளைக் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் கும்கி யானையை பயன்படுத்தி கருப்பன் யானையை லாரியில் ஏற்றினர். யானை முதுமலை அல்லது பொள்ளாச்சி டாப் சிலிப்புக்கு கொண்டு செல்லப்படுகிறா? அல்லது வேறு பகுதியில் விடப்படுகிறா என்பதை வனத்துறையினர் ரசகியமாக வைத்துள்ளனர். கடந்த முறை தருமபுரியில் பிடிபட்ட யானை தெங்குமரஹாவில் விட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் யானை விடுவிக்கும் இடம் ரகசியம் காக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த யானை தற்போது பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். பிடிபட்ட யானையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரியில் ஏற்றி, எந்த இடத்திற்கு கொண்டு செல்வது என கள இயக்குநர் ராஜ்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக பொதுமக்களை அச்சுறுத்திய யானை கும்கி யானைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுயானை பிடிப்பட்டது எப்படி என வனத்துறையினர் தெரிவித்தாவது, "கடந்த சில மாதங்களாக யானை ஓடை, பள்ளம் ஆகிய பகுதியை சுற்றிவந்தது. யானையை பிடிக்கும் போது பள்ளத்தில் தவறி விழுந்தால் உயிரிழக் கூடும் என்பதால் சமவெளி பகுதிக்கு வரும் வரை காத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு கரும்பு சாப்பிட வந்த யானை தப்பி ஓடி விடாதபடி ஜேசிபி இயந்திரம் மூலம் சுற்றி வளைத்து யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Summer vacation: ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!