ETV Bharat / state

செயற்கை வனக்குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்! - wild animals

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை வனக்குட்டைகளில் வாடகை லாரி மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

செயற்கை வனக்குட்டைகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
author img

By

Published : May 13, 2019, 11:19 PM IST

தென்னந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வாழ்வதற்கேற்ற இடமாக உள்ளது. ஒரு லட்சத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் தாண்டிய நிலையில், கோடை காலமான தற்போது தீவனம், குடிநீர் ஆகியவற்றைத் தேடி யானைகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வனம் காய்ந்து வனக்குட்டைகள் வறண்டும் காணப்படுவதால், சேறும் சகதியுமாக உள்ள நீரை யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் குடித்து வருகின்றன.

இதனால் மாசடைந்த நீரை பருகும் விலங்குகள் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. தற்போது யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனக்கோட்டங்களில் நான்கு புதிய செயற்கைகுட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் வாடகை லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

செயற்கை வனக்குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்

வனக்குட்டைகளில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் வாடகை லாரிகளில் எட்டாயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பட்டு வருகிறது. தண்ணீர் அருகே குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் உப்புக்கட்டியும் வைக்கப்பட்டது.

செயற்கை குட்டைகளில் உள்ள நீர் இரு நாட்களுக்கு போதுமானதாக உள்ளது. ஆங்காங்கே செயற்கை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால் யானைகள், காட்டெருமைகள், மான்கள் தண்ணீரைத் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன.

தண்ணீர் தேடி நீண்ட பயணம்:

வனவிலங்குகளின் தாகம் தணிக்க செயற்கை வனத்தொட்டியில் நீர் நிரப்புதல்வனத்துறை நடவடிக்கை

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_SATHY_05_13_ELEPHANT_WATER_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வனக்குட்டைகள் வறண்டுபோன நிலையில்  யானை,புலி,சிறுத்தை,மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை வனக்குட்டைகளில் வாடகை லாரி மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

தென்னந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புலி,சிறுத்தை,யானை வாழ்வதற்கேற்ற இடமாக உள்ளது.1 லட்சத்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் தாண்டிய நிலையில் கோடை காலமான தற்போது தீவனம் மற்றும் குடிநீர் தேடி யானைகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளதுவனம் காய்ந்து வனக்குட்டைகள் வறண்டும் காணப்படுவதால் சேறும் சகதியுமாக உள்ள நீரை யானைகள்சிறுத்தைபுலிகள்,மான்கள் ,காட்டெருமைகள் குடித்து வருகின்றனஇதனால் மாசடைந்த நீரை பருகும் விலங்குகள் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனதற்போது யானை,மான்கள்காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனக்கோட்டங்களில் புதிய செயற்கைகுட்டைகள் அமைக்கப்பட்டு அதில் வாடகை லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறதுவனக்குட்டைகளில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதுஇதனால் வாடகை லாரிகளில்  ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு  வனக்குட்டைகளில் நிரப்பட்டு வருகிறதுதண்ணீர் அருகே குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் உப்புக்கட்டியும் வைக்கப்பட்டது.செயற்கை குட்டைகளில் உள்ள நீர் இரு நாள்களுக்கு போதுமானதாக உள்ளதுஆங்காங்கே செயற்கை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால் யானைகள்காட்டெருமைகள்மான்கள் தண்ணீர் தேடி  வனத்தையொட்டியுள்ள கிராமத்துக்கு நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன.  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.