ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (24). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி கட்டட பணி செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்று (அக். 11) இரவு ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாகிற்குச் சென்று மது வாங்கிவிட்டுச் செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் குணசேகரனை கத்தியால் சரமாரியாக தாக்கியதோடு, அவரிடமிருந்து ரூபாய் இரண்டாயிரம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த போத்தனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குணசேகரனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்த நிலையில், ஐந்து பேரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த் பிரவீன் (20), போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தென்னரசு (20), சீனிவாச நகரைச் சேர்ந்த மகேஷ்ராஜ் (21), கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சிவபாண்டி என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது குணசேகரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: அடிதடி, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம்!