ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கரும்பு வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கரும்பு பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பவர் ஸ்பிரேயர் பயன்படுத்தி மருந்து தெளித்து வந்தனர்.
மருந்து தெளிப்பதற்கு அதிகம் செலவாகிறது என விவசாயிகள் கூறியதால், தனியார் சர்க்கரை ஆலை சார்பில் ஆளில்லா விமானம் (டிரோன்) பயன்படுத்தி கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
ட்ரோன் பயன்படுத்தி கரும்பு பயிர்களுக்கு மருந்து தெளிப்பதன் மூலம் ஆள் கூலி, மற்றும் நேரம் மிச்சம் ஆவதோடு குறைந்த அளவிலான மருந்து மற்றும் தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும் என்பதை செயல்விளக்கம் மூலம் செய்து காட்டி விவசாயிகளுக்கு கரும்பு பயிரில் களைக்கொல்லியை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ட்ரோன் பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி திம்பம் மலைப்பாதையில் ஆய்வு