ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் உபரிநீர் பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

bhavani
author img

By

Published : Aug 6, 2019, 12:24 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இது வினாடிக்கு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடியாகவும், குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 523 கனஅடியாகவும் நீர்வரத்து உள்ளது.

பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தன்குட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.69 அடியாகவும், நீர் இருப்பு 8.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 870 கனஅடியாகவும், வெளியேற்றம் 205 கனஅடியாகவும் இருந்து வருகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வருவதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி ஆகிய விவசாய பாசனத்துக்கு மொத்தம் 37 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்கான 12.3 டிஎம்சி இருப்பு இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இயலும். ஆனால், தற்போது அணையில் 8.8டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:Body:tn_erd_01_sathy_bhavanisagar_dam_vis_tn10009

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு:
ஒரே நாளில் 1 அடி நீர்மட்டம் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி, அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் பவானிசாகர் அணைக்கு திறந்துவிட்டப்பட்டது இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பில்லூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடப்பட்டு பவானிசாகர் அணைக்கு வந்து சேர்ந்தது. பவானிசாகர் அணைக்கு அதிபட்சமாக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர்வரத்தாகவும் குறைபட்சமாக 8ஆயிரத்து 523 கனஅடியாக இருந்தது.பில்லூர் அணையில் இருந்து பவானிஆற்றில் திறந்துவிடப்பட்டதால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சித்தன்குட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர். அதிகமான நீர்வரத்து காரணமாக அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஓர் அடி உயர்ந்தது. தற்போதைய நிலவரப்பட்டி அணையின் நீர்மட்டம் 64.69 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 870 கனஅடியாகவும் உள்ளது. அணையில் நீர் இருப்பு 8.8 டிஎம்சியாகவும் அணையில் இருந்து 205 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வருவதால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அணையில் நீர்மட்டம் 64 அடியாக அதாவது 8.8 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் திறப்பு இல்லை
ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி ஆகிய விவசாய பாசனத்துக்கு மொத்தம் 37 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் 12.3 டிஎம்சி அணையில் நீர்இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இயலும். தற்போது அணையில் 8.8 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளதால் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.