தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஏப். 6) சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று (ஏப். 7) ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான C. கதிரவன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளான
- ஈரோடு கிழக்கு,
- ஈரோடு மேற்கு,
- மொடக்குறிச்சி,
- பெருந்துறை,
- பவானி
- அந்தியூர் என வாக்கு எண்ணும் மையங்களான, சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து மற்றும் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் குறித்தும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியும் ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு இருப்பு அறையில்(strong room), பாதுகாப்பாக வைத்து ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான C. கதிரவன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து, பாதுகாப்பாக பூட்டி சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: 'செக் மோசடி வழக்கு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்; சரத்குமார் எஸ்கேப்!'