ETV Bharat / state

நிவாரணப் பொருள்களுடன் மாயாற்றின் நடுவே சிக்கிக்கொண்ட ஜீப் - Mayaru

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வன கிராம பழங்குடியின குடும்பங்களுக்கு ஜீப்பில் மாயாற்றை கடந்து நிவாரணப் பொருள்களை தன்னார்வலர்கள் இன்று (ஜூன் 23) வழங்கினர்.

மாயாற்றின் நடுவே திடீரென ஜீப் நகரமுடியாமல் நின்றதால் பரபரப்பு

author img

By

Published : Jun 23, 2021, 8:31 PM IST

சத்தியமங்கலம் அருகே வன கிராமங்களைச் சேர்ந்த 310 பழங்குடியின குடும்பங்களுக்கு பருப்பு, மாவு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் நந்திபுரம், பூதிகுப்பை, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன.

இதில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள இக்கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயற்றை கடந்து பரிசலில்தான் செல்லமுடியும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வன கிராம பகுதிக்கு பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் வன கிராம பழங்குடியின மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப்பொருள்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

நிவாரணப் பொருள்களை மீட்ட ஓட்டுநர்

இதையடுத்து, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து மளிகைப்பொருள்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி 310 பழங்குடியின குடும்பங்களுக்கு பருப்பு, மாவு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை இன்று (ஜூன் 23) வழங்குவதற்காக வன கிராமங்களுக்குச் சென்றபோது, மாயாற்றில் செந்நிற மழைநீர் கரைபுரண்டு ஓடியதால் நிவாரணப் பொருள்கள் கொண்டுசென்ற ஜீப்பை ஆற்றுநீரில் லாவகமாக செலுத்தி மறு கரையை அடையும்போது, ஜீப் திடீரென நின்றது.

சமயோசிதமாக யோசித்து ஓட்டுநர் மீண்டும் ஜீப்பை இயக்கி நிவாரணப் பொருள்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தார். இதைத்தொடர்ந்து வன கிராமங்களிலுள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் பழங்குடியின மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.

இதையும் படிங்க: 'யானைக்கு ரேடியா காலர் பொறுத்த வரவழைக்கப்பட்ட கும்கிகள்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.