ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனையில் கடந்த 28 ம் தேதி பணியில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சிவகுமாரை தனது ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை பெற வந்த விவசாயி வெள்ளச்சாமி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து விவசாயி வெள்ளச்சாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கால்நடை மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்