ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "சென்னை உயர் நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் ஹெச். ராஜாவைக் கைதுசெய்ய முனைப்பு காட்டாத தமிழ்நாடு அரசு, நெல்லை கண்ணனை கைதுசெய்தது நவீன தர்மமா? குல தர்மமா ?
மாநில அரசுகளின் கூட்டாட்சித் தத்துவத்தில்தான் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் அதை நிறைவேற்றமாட்டோம் என கேரள அரசு கூறியதைப் போல தமிழ்நாடு அரசும் அறிவிக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி பதவியேற்ற மாநில முதலமைச்சர்கள் அதனை மீறும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்கக் கூடாது. இது அரசியல் சானசத்தின் அடிப்படை கட்டுமானத்தை உடைக்கும் செயல் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அரசியல் சட்டம் மீறப்படும்போது, அதனை மீறாமல் காக்கும் பொறுப்பு தமிழ்நாட்டு அரசுக்கு உண்டு. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் மாபெரும் கனவு சாவித்ரிபாய் பூலே!