தமிழ்நாடு - கர்நாடக எல்லையில், கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள சென்னப்பனபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உள்ள பழமை வாய்ந்த வீரபத்ரேஸ்வர கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறுவதால் இத்திருவிழாவில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இன்று காலை கோயிலில் வீரபத்ரேஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, உற்வசவர் தேரில் அமர வைத்து தேர் கோயிலைச்சுற்றி பவனி வந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுந்துவந்தனர். கோயிலைச் சுற்றிவரும் போது, எதிர்பாராதவிதமாக தேர் அச்சு முறிந்து, சாய்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் தேருக்கு அடியில் 4 பேர் சிக்கிக்கொண்டதால், அங்கிருந்த பக்தர்கள் தேரை மேலே தூக்கி அவர்களை மீட்டனர். இதில் காயமடைந்த பக்தர்களை ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாம்ராஜநகர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்..