ETV Bharat / state

காலிங்கராயன் வாய்க்காலில் அலுமினியக் கழிவுகள் கலப்பு! - காலிங்கராயன் வாய்க்கால்

ஈரோடு : காலிங்கராயன் கால்வாயில் அலுமினியக் கழிவுகளைக் கொட்டி கால்வாய் நீரை மாசுபடுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலிங்கராயன் வாய்க்காலில் அலுமினிய கழிவுகள் கலப்பு

author img

By

Published : Aug 21, 2020, 3:24 PM IST

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து காலிங்கராயன் கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பான்மையான விவசாயிகள், பாசன வசதி பெற்று வருகின்றனர். மேலும், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் குடிநீர் தேவையும் இதன் மூலம்தான் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த மாதம் முதல் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், கரையோரங்களில் விவசாயப் பணிகள் சுறுசுறுப்புடனும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (ஆக. 21) மதியம், ஈரோடு அருகேயுள்ள சுண்ணாம்பு ஓடை காலிங்கராயன் கால்வாயில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அலுமினியக் கழிவுகளை லாரிகள் மூலம் கொண்டுவந்து கொட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் காலிங்கராயன் கால்வாய் தண்ணீர் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. ஆபத்தான அலுமினியக் கழிவுகள் கலந்த இந்தத் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அலுமினியக் கழிவுகள் கலந்த தண்ணீரை குடிப்பதற்குப் பயன்படுத்தினால், கடும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் அலுமினியக் கழிவு கலந்த தண்ணீர் விடப்பட்ட நிலப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

காலிங்கராயன் வாய்க்காலில் அலுமினிய கழிவுகள் கலப்பு

இவ்வாறு, அனைத்துத் தரப்பினருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அலுமினியக் கழிவுகளைக் கொட்டிச் சென்ற தொழிற்சாலைகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.