ஈரோடு: ஈரோடு அடுத்த மன்னாதம்பாளையம் குல விளக்கு அருகே உள்ள காவிரி ஆற்றில் கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க பொதுமக்கள் சென்றனர். இவர்களுடன் பெருமாநல்லூர் செட்டிபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்ற கல்லூரி மாணவர், மற்றும் பெருமாநல்லூர் சீராம்பாளையத்தை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளர் கோவிந்தராஜ் சென்றுள்ளனர்.
காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க சென்ற இவர்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். உடன் வந்தவர்கள் இருவரையும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.