ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் சார்பில் இரண்டு நாட்கள் (மே.16.17) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கனி மார்க்கெட், தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட 26 சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான்” - ஆ.ராசா