ETV Bharat / state

காய்கறி வாகனத்தில் குட்கா பொருள்கள் கடத்திய நபர்கள் கைது - crime news

காய்கறி வாகனத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஆறு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருட்கள்
குட்கா பொருட்கள்
author img

By

Published : Sep 20, 2021, 12:52 PM IST

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், காவல் துறையினர், இன்று (செப்.20) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த காய்கறி வண்டியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் காய்கறிகளுக்கு நடுவே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் ஆறு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இக்கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த வாகன ஓட்டுநர் மோகித் (26), செல்வராஜ் (25) இருவரையும் கைது செய்தனர்,‌ மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இவர்கள் கர்நாடக மாநிலம், கொள்ளேகாலில் இருந்து ஹான்ஸ், கூல்லிப், பான் மசாலா என சுமார் 800 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை ஈரோட்டிற்கு சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் பர்கூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.