ETV Bharat / state

பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது! - Gambling in Talawadi area bordering Karnataka

ஈரோடு அருகே தாளவாடி தோட்டத்துப்பண்ணை வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய, 26 பேர் கொண்ட கும்பலை கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது!!

author img

By

Published : Nov 4, 2022, 3:07 PM IST

ஈரோடு: தமிழ்நாடு, கர்நாடக எல்லையான தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்படி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் தாளவாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளி கிராமம், மல்லிகார்ஜுனா என்பவருக்குச்சொந்தமான தோட்டத்துப்பண்ணை வீட்டில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 26 பேர் கொண்ட கும்பலைப்போலீசார் சுற்றி வளைத்தனர்.

அவர்களை தாளவாடி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் கர்நாடக மாநிலம், மைசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சேர்ந்த மனு, சுவாமி, ரகு, சிவா, சதீஷ், ராஜு, ராகேஷ், கணேஸ்வரன், மகேஷ், பசுவண்ணா, சிவமல்லு, ராகேஷ், மாதேவ சாமி, மஞ்சு, சித்தலிங்க மூர்த்தி, சிவகுமார், மகேஷ், மஞ்சுநாத், அபி, வன்ற மணி, குமார், சிவானந்தா, சித்தேஷ், ரவி மற்றும் தோட்டத்து உரிமையாளர் மல்லிகார்ஜுனா எனத் தெரியவந்தது.

இதையடுத்துப் பணம் வைத்து சூதாடிய 26 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய பணம் ரூ.80 ஆயிரத்து 640 ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது!!

இதையும் படிங்க:பண்ணாரி சோதனை சாவடி வழியாக கடத்த முயன்ற 2 டன் குட்கா பறிமுதல்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.