ETV Bharat / state

சுண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்களை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுண்டைக்காய் பறிக்கச் சென்ற பழங்குடியின பெண் யானை தாக்கி உயிரிழப்பு!

author img

By

Published : Dec 24, 2021, 8:51 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள ராமபைலூர் தொட்டி கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் கால்நடை வளர்ப்பு, சுண்டைக்காய் பறித்து விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம் ஆகும்.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த மசனி (57), பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகியோர் வனப்பகுதியில் உள்ள தாசன்குட்டையில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புதர் மறைவில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று நான்கு பெண்களையும் துரத்தத் தொடங்கியது.

உடலை மீட்பதில் சிரமம்

காட்டு யானையானது மசனி என்னும் பெண்ணை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த மசனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமிருந்த மூன்று பெண்களும் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், காயமடைந்தோரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது வனப்பகுதியில் யானை நடமாட்டம் இருந்ததால் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் வனத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டியடித்து உடலை மீட்டனர். யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Lowest temperature: 125 ஆண்டுகளில் 2ஆவது முறையாக தெலங்கானாவில் பதிவான மிகக்குறைந்த வெப்பநிலை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.