ஈரோடு: அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உபரி நீர் பெரிய கொடிவேரி அணை வழியாக பவானி காவரி ஆற்றில் கலக்கிறது. இதனால் பெரிய கொடிவேரி அணையின் வெள்ளத்தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுந்து வருகிறது.
இதனால், கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!