ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் நீர் அருவிபோல கொட்டுவதால் அணையில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவி போல கொட்டும் நீரில் குளித்தும், பரிசல் பயனம் மேற்கொண்டும், அங்கு விற்கப்படும் பொறித்த மீன்களை உண்டும் குடும்பத்துடன் பொழுதுபோக்குவது வழக்கம்.
இந்தநிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணை வழியாக அதிக அளவு உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு கொடிவேரி அணைக்கு வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுபணித்துறை அலுவலர்கள் தடை விதித்துள்ளனர். கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளதால், அணையில் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க:அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு