ETV Bharat / state

கொடிவேரி அணையில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயனிகளுக்கு தடை - கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு

பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கொடிவேரி அணையில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kodiveri dam
Kodiveri dam
author img

By

Published : Sep 6, 2021, 6:24 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றாலா பயனிகள் விடுமுறை தினங்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பலவேறு மாவட்டங்களிலிருந்தும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபட்டு வந்தது.

இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயனிகள் அணையில் குளிக்கவோ, மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயணம் மேற்கொள்ளவோ, பொதுபணிதுறை தடை விதித்திருந்தது.

தொடர்ந்து பவானி ஆற்றில் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஐந்தாவது நாளாக கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள பொதுமக்கள் துணிகள் துவைக்கவோ, கால்நடை மேய்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.